அண்மையில் ஒரு செய்தி, ஹாரி பாட்டர் எழுதிய ஜே.கே. ரௌலிங் மீது ஒரு வழக்கு என்னவென்றால் அவர் "The Adventures of Willy the Wizard: No. 1 Livid Land" என்ற புத்தகத்திலிருந்து காட்சிகளை திருடி தனது கதையுடன் இணைத்துள்ளார்யென்பதுதான் அது. இணையுலகில் ஒருவரதுக் கருத்தை மற்றவர் திருடிப் போடுவதென்பது காலம்காலமாக நாம் வரும் திருட்டுத் தொழிலின் நவீன வடிவம் எனக்கூறலாம். அனால் இணையத்திருடர்கள் பொழுதுபோக்காகவும், வியபரரீதியாகவும், அறியாமையாலும் உருவாகிறார்கள். எந்த வகையாகயிருந்தாலும் எழுத்துக்குச் சொந்தக்காரர்படும் வலிக்கு முக்கியக் காரணமாகிறார்கள்.
இணையம் வளர்ந்த அளவுக்கு அதற்கு பாதுகாப்புக்கள் வளரவில்லை, சைபர் கிரைம் நாளுக்கு நாள் வளர்கிறது ஏனெனில் தொழிற்நுட்பம் அவ்வளவு பரந்தது. புதுப்புது யுக்திகளில் அச்சுத்தங்களுடன் பல இணையதளம் இளைய சமுதாயத்தைக் குறிவைத்து தொடங்கப்பட்டு வருகிறது. அதில் பதிவுத்திருட்டு என்பதும் ஒரு அச்சுத்தமே. பல நாள் பாடுபட்டு எழுதிய ஒரு படைப்பை சில மணித்துளிகளில் எளிதில் திருடிப் பலனை பெறுபவர்கள் தான் பதிவுத்திருடர்கள். அதைத் தட்டிக்கேட்கவோ முட்டிப்பார்க்கவோ பெரியளவில் விழிப்புணர்ச்சியில்லை. காரணம் எது திருடப்பட்ட பதிவு யார், உண்மையான படைப்பாளி என்ற கேள்விகளுக்கு பதிலில்லாமே திருட்டுப்பதிவை நாமும் ஆதரித்துவந்திருப்போம்.
பிடித்தமான பதிவுகளைப் பகிர்ந்துக் கொள்வதென்பது "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" சரிதான் ஆனால் அது உரிமையாளருக்கு தகுந்த மரியாதைக் கொடுக்காவிட்டால் "கடைத் தேங்காவை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததுப் போல" ஆகும். தயவு செய்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும் உதாசீனப் படுத்தாதீர்கள்.
இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டது தெரிந்தாலே திருட்டுப் பதிவுகள் குறையும் என்ற யோசனையில் உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன். கடந்த இடுகை அதிகமான மக்களை அடையாததால் அந்த இடுகைக்கு ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
அடுத்த இடுகையில் அதிகம் திருடப்படும் தளங்களின் தொகுப்பு வெளியிடப்படும். அதன் பிறகு தனிநபர் திருட்டுக்களின் அறிக்கை வெளிவரும்
உங்கள் ஆதரவையும் வேண்டிக்கொள்கிறேன்
No comments:
Post a Comment