எங்கோ யாருக்கோ ஒருவரின் பொருள் திருடப்படுகையில் அதைப் பார்த்துவிட்டுப் பரிதாபப்பட்டுவிட்டு நமது வேலைகளை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண மனிதர்கள் நாம். அதே போல ஒருநாள் நமது பொருளும் திருடப்படும் என்பதை கொஞ்சம் யூகிக்க நமது சோம்பேறித்தனம் தடுக்கிறது. பதிவிலகில் பெரிய பெரிய தகவல் களஞ்சியங்கள் உருவாகும் காலம் வெகுத்தொலைவில் இல்லாத பொழுதில் பதிவு திருட்டுக்களால் அவை வீண்ணடிக்கப்படுவது உறுதி. இந்த இடுகையில் எதுவெல்லாம் பதிவுத் திருட்டாகக் கொள்ளலாம் என்று எனது பார்வையை விவரிக்கிறேன்.
பொதுவாக நம்பப்படுவது, ஒரு பதிவை அப்படியே நிரல் எடுத்து தனது தளத்தில் உரியவரின் ஒப்பமின்றி இடுவது. பரவலாக அதைத் தான் பதிவுத் திருட்டு என்கிறோம் ஆனால் கொஞ்சம் யோசித்தால் மேலும் பல வழிகளில் ஒருவரின் அறிவுச் செல்வத்தை அபகரிக்கமுடியும்
தான் விரும்பிய வேறொருவரின் பதிவை படித்ததில் பிடித்ததாக தனது தளத்தில் இட்டு கடைசியில் உரியவரின் பெயரைமட்டும் போட்டு நன்றி சொல்வது. இங்கே கவனிக்க வேண்டியது இணையத்தில் நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக புதுமையான பெயர்களில் எழுத்தாளர்கள் உதயமாகிறார்கள். அத்தகையவர்களுக்கு பரந்துபட்ட தமிழ் பதிவுலகம் அறிமுகமில்லை அவர்களின் பெயரை மட்டும்(தள இணைப்பின்றி) போட்டுக் கொள்வதால் அந்த படைப்பாளி அடையாளப்படுத்தப்படாமல் போகிறான்.
அடுத்ததாக சில இடங்களில் பதிவுடன் அந்தப் பதிவரின் தளத்திற்கும் இணைப்புக் கொடுப்பார்கள். நாமும் அடையாளப்படுத்தப் படுகிறோம் என்று அந்த படைப்பாளியும் அமைதியடையலாம், அது அவரின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் அவ்வாறு ஒருதளத்திலிருப்பவைகளை காப்பி செய்து போடுவது கூகிள் போன்ற தேடுதளங்களுக்குத் தெரியாது. அவை குறி சொற்களுக்கு தேடும் போது நமது தளத்திற்கு பதிலாக காப்பி செய்து போடப் பட்ட தளத்தையே முன்னிறுத்தும். அப்போது பாமர வாசகனுக்கு எழுத்தாளன் யார் என்று தெரியாமலே வாசித்துவிட்டு செல்வான்.
இதற்கு அருமையான உதாரணங்கள் Forum எனப்படும் இணையக் குழுக்களே . இவை தனது வாசகர்களால் பல தளங்களில் இருந்து பிடித்த இடுகைகளை தனது தளத்திற்கு வாங்கிக்கொள்ளும் சில சமயம் படைப்பாளியின் பெயரின்றியும் பிரசுரிக்கப்படுவதுண்டு. இந்த குழுக்கள் எப்போதும் அதிக டிராபிக்கை கையில் வைத்துக்கொள்வதால் கூகுளின் ரேங்க் அதிகம் பெற்று தேடுதளங்களில் முன்னிலைப்படுத்தப்படும். புதிதாக தேட நினைத்து தேடுபவர்களுக்கு பதிலாக இந்த தளங்களே முதன்மை படுத்தப்பட்டு ஹிட்டுக்கள் எனப்படும் புது வாசகர்களைத் தட்டிச் சென்றுவிடும். இத்தகைய நிகழ்வே தெரியாமல் நமது படைப்பாளி யாரும் இல்லாத தெருவில் டீயாற்றிக் கொண்டுஇருப்பான்.
அடுத்ததாக நமது அறியாமையால் நமது பதிவுகளுக்கு படங்கள் போடுவதற்காக கூகிள் தேடி படங்களை எடுத்து நமது பதிவுகளை அலங்கரிப்போம் சிலர் கூகுளுக்கு நன்றியும் சொல்வார்கள். உண்மையில் அந்தப் படங்கள் போது பயன்பாட்டிற்கு இல்லாத போது இப்படி பயன்படுத்துவதும் ஒருவகையில் திருட்டு என்பேன். உண்மையில் இந்தப் படங்கள் கூகிள் வெளியிடுவதில்லையே வேறுயாரோ ஒருவரின் ஒளி வண்ணத்தில் உதயமானது. அவர்களின் தளத்துப் படங்களை அறியாமையால் திருடி போட்டுவிட்டு கூகுளுக்கு நன்றி சொல்வது எப்படி பொருந்தும்? உங்கள் படமும் தேடுதளங்களின் வரிசையில் முதன்மை படுத்தப்படலாம் அவரின் உழைப்பை லாவகமாக தட்டிவிட்டுச் செல்லும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
மேலே கூறிய அனைத்தம் பதிவுத் திருட்டின் வகைகளே அனைத்தையும் தடுக்கமுடியாவிட்டாலும் ஒரு புரிதலுக்காகவாது இதை அறிந்திருக்க வேண்டும்.
இந்த வார பதிவுத் திருட்டு நட்சத்திரம்
இவர் தளத்தில் பொதுவாக தின நாளிதழ்களிருந்து அதிகமான பதிவுகளும் மற்றும் நமது சக பதிவர்களின் பிரசித்திப் பெற்றப் பதிவுகளும் காணலாம். சோதிக்க விழைபவர்கள் அந்த தளத்தின் ஏதாவது ஒரு பதிவை எடுத்து கூகுளில் இட்டால் உண்மைகள் ஊருக்குத் தெரியும்
மீண்டும் சந்திப்போம்
நன்றி
இந்தாங்க.. இவரையும் சேத்துக்கோங்க ..
ReplyDeletehttp://aakayam.blogspot.com/2010/05/defender.html
நன்றி
ReplyDeleteஅவரும் நமது short Listல் இருக்கிறார்