என்னுடைய பதிவுகள், சகோதரர்களான வந்தேமாதரம் தொழில் நுட்பத் தளப் பதிவர் சசியின் பதிவுகள், அட்ராசக்க ப்ளாக் சி.பி.செந்தில்குமாரின் பதிவுகள், செங்கோவி ப்ளாக்- செங்கோவியின் பதிவுகள், பலே பிரபு தளத்தின் ஓனர் பிரபு கிருஷ்ணாவின் பதிவுகள், தொழில்நுட்பப் பதிவிகளை வழங்கி வரும் பொன்மலரின் பதிவுகள்; எனப் பலரின் பதிவுகளை நம்பித் தான் இப்போது பல இணையத் தளங்களும், வலைப் பதிவுகளும் இயங்கி வருகின்ற்ன போலும்.
இதில் காமெடியான மேட்டர் என்னவென்றால், நாம் எழுதிய பதிவுகளின் டைட்டில் மாற்றப்பட்டு அவை திரட்டிகளில் காப்பி பேஸ்ட் மன்னர்களால் இணைக்கப்படும் போது, அதிக ஹிட்ஸினையும், சூடான இடுகைகளிலும் வந்து விடுகின்றன. இலங்கையின் பண்பலை வானொலியான வெற்றி எப். எம் இல் வெளிவந்த என்னுடைய வலைப் பதிவு பற்றிய அறிமுகத்தினை- ஏன் இந்தப் பதிவினைக் காப்பியடித்தோம் எனும் சிந்தனையேதுமின்றி, usetamil,net எனும் இணையத் தளத்தினர் (‘பதிவர்கள், டுவிட்டர், பேஸ்புக் பாவானையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை எனும் தலைப்பில் நான் எழுதிய பதிவினை) ஏதோ, ஒரு தொழில் நுட்பப் பதிவினை நிரூபன் எழுதியிருக்கிறார் எனும் நோக்கில் காப்பியடித்துப் போட்டுப் பிரபலமாக்கியிருக்கிறார்கள்.
இதில் மனவருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால், என்னுடைய- சக நண்பர்களின் பதிவுகளைக் காப்பி பண்ணித் தம் பதிவுகள் போலக் காட்டிக் கொள்ளும் இணையத் தளங்கள், எங்கேயிருந்து இப் பதிவினை எடுத்தோம் எனும் தகவலைக் கூட வெளியிடுவதில்லை. பதிவிற்கான சுட்டிகளைக் கூட இணைப்பதில்லை. நாம் கஸ்டப்பட்டு எழுதும் பதிவினை, பதிவு வெளியாகி; ஒரு சில மணி நேரங்களினுள் காப்பி பண்ணி, எழுதிச் சுய இன்பம் காண்கிறார்கள் இந்த மனிதர்கள்.
என்னுடைய பதிவினையும், என் நண்பர்களின் பதிவினையும் காப்பி பண்ணித் தம் பதிவு போன்று போட்டிருந்த ஒரு இஸ்லாமியப் பெயர் கொண்ட இ.....தா...ர் எனும் வலைப் பதிவின் ஓனருக்கு மூன்று மெயில் அனுப்பி, பதிவினை நீக்கச் சொல்லிய பின்னர் வந்த பதில் மடல் என்ன தெரியுமா?
‘இது நான் எழுதிக் ஹிட்ஸ் ஆக்கிய பதிவு, இதனை நீங்கள் வேணும்னா காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கலாம். நான் காப்பி பேஸ்ட் பண்ணவில்லை என்று’.
மேற்படி பதிவில் இருந்த சகோதரன் கந்தசாமியின் கை வண்ணத்தில் உருவான, என் வலைப் பூ முகவரியுடன் கூடிய போட்டோ பற்றிய கேள்வியினை அடுத்ததாக கேட்ட பின்னர் தான் அப் பதிவினை நீக்கினார் ப்ளாக் ஓனர்.
பதிவர்களின் பதிவினைக் காப்பியடிக்கும் நபர்களுள், இனயம் தாஹீர், விவசாயி.com, கவிந்தன், கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு, usetami.net , தமிழ்CNN, மற்றும் லங்காசிறி, மனிதன், வை.அருள்மொழி, முதலிய தளங்கள் முன்னணி வகிக்கின்றன. இன்னும் பல தளங்களும் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்கள் உறவுகளே!
இவர்கள் எம் பதிவுகளைக் முன் அனுமதியேதுமின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணுவதால், எம் வலைப் பூக்களில் நாம் எழுதும் பதிவுகள் பல பேரைச் சென்றடைவது தடுக்கப்படுகின்றது. இன்றைய தினம் நான் எழுதிய பதிவினைக் கூட விவசாயி.Com கவிந்தன் காப்பி பண்ணி தன் பதிவு போன்று வெளியிட்டதால், என்னுடைய பதிவு பிரபலமாக நீண்ட நேரம் எடுத்தது.
இது தொடர்ந்தும் இடம் பெறுமாயின் நாம் எழுதும் பதிவுகளுக்கு என்ன உத்தரவாதம்?
இனயம் தாஹீர் என்பவர் பல பதிவர்களின் பதிவுகளைக் காப்பி பேஸ்ட் பண்ணி வருவதால், அவரின் வலைப் பதிவினைப் பல திரட்டிகள் நீக்கி விட்டன. இதே போன்று ஏனைய திரட்டிகளும் இந் நபர்களின் பதிவுகளை சேர்க்கையிலிருந்து நீக்கி விட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
எம் பதிவுகள் காப்பி செய்யப்பட்டிருக்கிறதா என்பதனை, எம் பதிவில் உள்ள ஒரு சில வசனங்களைக் கூகிளில் கொடுத்துத் தேடுவதன் மூலம் கண்டறிய முடியும்.
பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா? இதற்கான உங்களின் பதில் என்ன?
அன்பிற்குரிய நண்பா,
ReplyDeleteஇது வேண்டாமே,
தயவு செய்து இந்தப் பதிவினை நீக்கி விடுங்கள்.
என் தளத்தின் மேற்பகுதியில் என் பதிவினை வேறு தளங்களில் பகிர வேண்டாம் என எழுதியுள்ளேன்.
புரிந்து கொள்வீங்க என்று நினைக்கிறேன்.
இந்தப் பிரச்சினையை நாம் ஆராய்ந்து, தற்போது தாஹீர் காப்பி பேஸ்ட் போடுவதிலிருந்து திருந்தி விட்டார்,
ReplyDeleteஆகவே மீண்டும் இப் பிரச்சினையைக் கிளற வேண்டாம்.
தயவு செய்து இப் பதிவினை நீக்கி விடுங்கள் நண்பா