Monday, May 24, 2010

டெக்னிக்கலாக நடப்பது என்ன?

பொதுவாக தொழிற்நுட்பச் செய்திகள் ஒரு சமுக வளர்ச்சிக்கு உதவுபவைதான் என்றாலும், அதன் மூலம் அறிவியல் சார்சமுகம் உருவாகினாலும், ஒரு படைப்பாளியை வருத்தி அதை மற்றவர்கள் பயனடைவது மிகவும் மோசமானது. பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்குச் சமம். கணினி சார் பதிவுகள் திருடப்படுகையில் அத்தகைய பதிவுகளின் புதுவரவு கணிசமாக குறையும் என்பது உண்மை 
இந்தப் பதிவில் இவ்வார தினமலரிலிருந்து சுடப்பட்டவைகள் பற்றிய ஒரு சிறப்புப்பார்வை.

திங்கள் தோறும் வெளிவரும் கணினி மலர் கொண்டுள்ள தகவல் குறிப்புக்களை அச்சு அசலாக படத்துடன் திருடப்பட்டு தங்களின் பதிவில் வெளியிட்டுக் கொள்ளும் வலைப்பூக்கள் அதிகம். வெகுஜன பதிவருக்கு அவைத் தெரிவதில்லை, தள உரிமையாளர்தான் இவ்வாறு எழுதிகிறார் என பின் தொடர்பவர்களும், அத்தகைய தளங்களின் விளம்பரங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவை சரியான உதாரணாமாக படவில்லை, இதைப் போல ஒவ்வொரு வரும் செய்தால் நாளை தமிழ் பதிவுலகில் யாரும் புதிய தகவலைச் சொல்ல மாட்டார்கள். இந்த வார தினமலரிலிருந்து இன்னும் முழுமை யாக எல்லாரும் எல்லாப்பக்கத்தையும் சுடப்படாததல் கடந்த வார பதிப்பிலிருந்து இந்த ஆய்வு அறிக்கை.
 மீள் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் பின் வருமாறு. (இணையக் குழுக்கள் forum  நீங்கலாக)








இந்த திருட்டுகளில் கவனித்தால் அதிகமான தளங்கள் வர்த்தக ரீதியானவை என்பதும், வியாபார நோக்கோடு திருடப்பட்டவை என்பதும் விளங்கும். இத்தகைய தளங்களின் தவறை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு,   

இந்த வார திருட்டுப்பதிவு நட்சத்திரமாக பட்டம் சூட்டப்படும் வலைப்பூ http://denaldrobert.blogspot.com/
அதிகமாக நமது சக தொழிற்நுட்ப  பதிவர்களின்  பதிவுகளை அமைதியாக திருடி தனது பதிவில் இட்டு பகிர்ந்துக் கொண்டு வர்த்தக ரீதியாக லாபம் சேர்க்கும் அற்புதமான தளம்  

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதுவும் அவர்கள் தளத்திற்கு கொடுக்கும் ஒரு விளம்பரம் போன்றதே...! திருடராய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அறுக்க.. அறுக்க.. முளைத்துக்கொண்டே இருக்கும் ஒரு விஷச்செடி போன்றது திருட்டு வலைப்பூக்கள்..! எந்த வடிவிலும் மேலும் தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கும்.

    ReplyDelete