Saturday, September 10, 2011

நிரூபன் அவர்களின் ஆதங்கம்




என்னுடைய பதிவுகள், சகோதரர்களான வந்தேமாதரம் தொழில் நுட்பத் தளப் பதிவர் சசியின் பதிவுகள்அட்ராசக்க ப்ளாக் சி.பி.செந்தில்குமாரின் பதிவுகள்செங்கோவி ப்ளாக்- செங்கோவியின் பதிவுகள், பலே பிரபு தளத்தின் ஓனர் பிரபு கிருஷ்ணாவின் பதிவுகள்தொழில்நுட்பப் பதிவிகளை வழங்கி வரும் பொன்மலரின் பதிவுகள்; எனப் பலரின் பதிவுகளை நம்பித் தான் இப்போது பல இணையத் தளங்களும், வலைப் பதிவுகளும் இயங்கி வருகின்ற்ன போலும். 

இதில் காமெடியான மேட்டர் என்னவென்றால், நாம் எழுதிய பதிவுகளின் டைட்டில் மாற்றப்பட்டு அவை திரட்டிகளில் காப்பி பேஸ்ட் மன்னர்களால் இணைக்கப்படும் போது, அதிக ஹிட்ஸினையும், சூடான இடுகைகளிலும் வந்து  விடுகின்றன. இலங்கையின் பண்பலை வானொலியான வெற்றி எப். எம் இல் வெளிவந்த என்னுடைய வலைப் பதிவு பற்றிய அறிமுகத்தினை- ஏன் இந்தப் பதிவினைக் காப்பியடித்தோம் எனும் சிந்தனையேதுமின்றி, usetamil,net எனும் இணையத் தளத்தினர் (‘பதிவர்கள், டுவிட்டர், பேஸ்புக் பாவானையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை எனும் தலைப்பில் நான் எழுதிய பதிவினை) ஏதோ, ஒரு தொழில் நுட்பப் பதிவினை நிரூபன் எழுதியிருக்கிறார் எனும் நோக்கில் காப்பியடித்துப் போட்டுப் பிரபலமாக்கியிருக்கிறார்கள். 

இதில் மனவருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால், என்னுடைய- சக நண்பர்களின் பதிவுகளைக் காப்பி பண்ணித் தம் பதிவுகள் போலக் காட்டிக் கொள்ளும் இணையத் தளங்கள், எங்கேயிருந்து இப் பதிவினை எடுத்தோம் எனும் தகவலைக் கூட வெளியிடுவதில்லை. பதிவிற்கான சுட்டிகளைக் கூட இணைப்பதில்லை. நாம் கஸ்டப்பட்டு எழுதும் பதிவினை, பதிவு வெளியாகி; ஒரு சில மணி நேரங்களினுள் காப்பி பண்ணி, எழுதிச் சுய இன்பம் காண்கிறார்கள் இந்த மனிதர்கள். 

என்னுடைய பதிவினையும், என் நண்பர்களின் பதிவினையும் காப்பி பண்ணித் தம் பதிவு போன்று போட்டிருந்த ஒரு இஸ்லாமியப் பெயர் கொண்ட இ.....தா...ர் எனும் வலைப் பதிவின் ஓனருக்கு மூன்று மெயில் அனுப்பி, பதிவினை நீக்கச் சொல்லிய பின்னர் வந்த பதில் மடல் என்ன தெரியுமா?
‘இது நான் எழுதிக் ஹிட்ஸ் ஆக்கிய பதிவு, இதனை நீங்கள் வேணும்னா காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கலாம். நான் காப்பி பேஸ்ட் பண்ணவில்லை என்று’.
மேற்படி பதிவில் இருந்த சகோதரன் கந்தசாமியின் கை வண்ணத்தில் உருவான, என் வலைப் பூ முகவரியுடன் கூடிய போட்டோ பற்றிய கேள்வியினை அடுத்ததாக கேட்ட பின்னர் தான் அப் பதிவினை நீக்கினார் ப்ளாக் ஓனர். 

பதிவர்களின் பதிவினைக் காப்பியடிக்கும் நபர்களுள், இனயம் தாஹீர்விவசாயி.com, கவிந்தன்கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு, usetami.net , தமிழ்CNN, மற்றும் லங்காசிறிமனிதன், வை.அருள்மொழி, முதலிய தளங்கள் முன்னணி வகிக்கின்றன. இன்னும் பல தளங்களும் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்கள் உறவுகளே!
இவர்கள் எம் பதிவுகளைக் முன் அனுமதியேதுமின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணுவதால், எம் வலைப் பூக்களில் நாம் எழுதும் பதிவுகள் பல பேரைச் சென்றடைவது தடுக்கப்படுகின்றது. இன்றைய தினம் நான் எழுதிய பதிவினைக் கூட விவசாயி.Com கவிந்தன் காப்பி பண்ணி தன் பதிவு போன்று வெளியிட்டதால், என்னுடைய பதிவு பிரபலமாக நீண்ட நேரம் எடுத்தது.

இது தொடர்ந்தும் இடம் பெறுமாயின் நாம் எழுதும் பதிவுகளுக்கு என்ன உத்தரவாதம்?
இனயம் தாஹீர் என்பவர் பல பதிவர்களின் பதிவுகளைக் காப்பி பேஸ்ட் பண்ணி வருவதால், அவரின் வலைப் பதிவினைப் பல திரட்டிகள் நீக்கி விட்டன. இதே போன்று ஏனைய திரட்டிகளும் இந் நபர்களின் பதிவுகளை சேர்க்கையிலிருந்து நீக்கி விட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். 

எம் பதிவுகள் காப்பி செய்யப்பட்டிருக்கிறதா என்பதனை, எம் பதிவில் உள்ள ஒரு சில வசனங்களைக் கூகிளில் கொடுத்துத் தேடுவதன் மூலம் கண்டறிய முடியும்.
திவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா?  இதற்கான உங்களின் பதில் என்ன?

Sunday, July 18, 2010

திருடர்களின் கைவரிசை

பதிவுகள் திருடப் படுத்தல், ஓட்டுக்கள் திருடப் படுத்தல் என்று போய் தமிழ் பதிவுலகம் திருட்டின் உச்சமாக வலைப் பூவையும் திருடப் பட்டுள்ளது. தொழிற்நுட்ப பதிவர்களின் பதிவிலேயே கைவரிசைக் காட்டிய திருடர்களுக்கு சாதரண பதிவர்கள் தளங்கள் எல்லாம் ஜுஜிப்பி.
Image courtesy:  www.indianexpress.com

நேற்று பதிவர் ஜில் யோகேஷ் பதிவின் மூலம் அறிபப்பட்ட செய்தி: தொழிற்நுட்ப பதிவர் சூரியக்கண்ணனின் வலை தளம் ஹாக் செய்யப் பட்டுள்ளது. 'ஹக்' என்கிற வார்த்தைக்கு சரியான தமிழ் பதம் கூடத் தெரியாத இந்தச் சூழலில் இந்த நிகழ்வு பெருத்தக் கண்டனங்களுக்குரியது. இதன் வாயிலாக மீண்டும் ஒருமுறை திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அவர்களுக்கு காலம் சரியான பாடம் புகட்டும் இதற்கிடையில் இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உங்கள் ஆலோசனைகளை மற்றவருடன் பகிர்ந்து மற்றும் திருட்டுப் பதிவுகளை ஆதரிக்காமலும் ஆரோக்கிய சூழலை அமைப்போம்.

 அவர் மீண்டும் ஒரு தளம் ஆரம்பித்துள்ளார். http://sooryakannan.blogspot.com/ அதற்கு நமது வாழ்த்துக்கள்.

நமக்கு கிடைத்துள்ள சில விழிப்புணர்வு செய்திகள் மற்றவருடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

  1. உங்கள் தளத்திற்கான பாஸ்வேர்ட்களை ஒரே மாதியாக வைக்காதீர்கள்.
  2. மைக்ரோசாப்ட் பரிந்துரைத்துள்ள இந்த டிப்ஸ்களை மனதில் கொள்ளுங்கள். http://www.microsoft.com/protect/fraud/passwords/create.aspx
  3. பதிவர் செய்தது போல ஒவ்வொரு பதிவையும் பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. கூகிள் தளம் சார்ந்த சேவைகள் இப்படி திருடப்பட்டால் உடனடியாக https://www.google.com/accounts/ForgotPasswd?fpOnly=1  பக்கமுலமாக புதிய பாஸ்வேர்டுக்கு  விண்ணப்பிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் https://www.google.com/support/accounts/bin/request.py?ara=1&hl=en&contact_type=ara&ctx=ara பக்கமுலமாக கணக்கை மீட்க விண்ணப்பிக்கலாம்.
  5. மேலும் சில வழிமுறைகளை படிக்க இங்கே செல்லுங்கள் http://www.labnol.org/internet/gmail-and-google-apps-hacked/11799/
  6. யாஹூ கணக்கை மீட்க: https://edit.yahoo.com/forgotroot
    reediff கணக்கை மீட்க: http://login.rediff.com/cgi-bin/subs/passwd_remind.cgi?FormName=showlogin
     
  7. உங்கள் பதிவு திருடப் பட்டுப்பட்டுள்ளதா என்று பார்க்க கூகிளைப் பயன் படுத்தலாம். உங்கள் பதிவின் ஏதாவது ஒரு வரியை காப்பி செய்து கூகுளில் இட்டால் அது சார்ந்த பதிவுகள் எல்லாம் காணக்கிடைக்கும். உதாரணமாக தினமலரின் இந்தப் பக்கத்தில் உள்ள ஒரு வாக்கியத்தை கூகுளில் போட்டால் அதை முடிவில் பல திருட்டுத் தளங்கள் சிக்குகிறது.
  8. மற்றும் http://copyscape.com/ தளத்தையும் பயன் படுத்தலாம்.
{{{ஆலோசனைகளைச் சொன்ன பதிவர்களுக்கு நன்றிகள்.}}}

இந்த வார திருட்டுப்பதிவு நட்சத்திரமாக பட்டம் சூட்டப்படும் வலைப்பூ http://therinjikko.blogspot.com/
இந்த தளத்தில் கடைசியாகப் பதிந்த சில பதிவுகளும் அதன்மூலமும் பின்வருவன.

வந்தாச்சு MS-Office 2010                 http://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/30/?fn=f1005306



மிக மிக மலிவான குவெர்ட்டி போன்  http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=672&ncat=5



நடிகை நமீதா தற்கொலை    http://cinema.dinamalar.com/

Monday, May 24, 2010

டெக்னிக்கலாக நடப்பது என்ன?

பொதுவாக தொழிற்நுட்பச் செய்திகள் ஒரு சமுக வளர்ச்சிக்கு உதவுபவைதான் என்றாலும், அதன் மூலம் அறிவியல் சார்சமுகம் உருவாகினாலும், ஒரு படைப்பாளியை வருத்தி அதை மற்றவர்கள் பயனடைவது மிகவும் மோசமானது. பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்குச் சமம். கணினி சார் பதிவுகள் திருடப்படுகையில் அத்தகைய பதிவுகளின் புதுவரவு கணிசமாக குறையும் என்பது உண்மை 
இந்தப் பதிவில் இவ்வார தினமலரிலிருந்து சுடப்பட்டவைகள் பற்றிய ஒரு சிறப்புப்பார்வை.

திங்கள் தோறும் வெளிவரும் கணினி மலர் கொண்டுள்ள தகவல் குறிப்புக்களை அச்சு அசலாக படத்துடன் திருடப்பட்டு தங்களின் பதிவில் வெளியிட்டுக் கொள்ளும் வலைப்பூக்கள் அதிகம். வெகுஜன பதிவருக்கு அவைத் தெரிவதில்லை, தள உரிமையாளர்தான் இவ்வாறு எழுதிகிறார் என பின் தொடர்பவர்களும், அத்தகைய தளங்களின் விளம்பரங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவை சரியான உதாரணாமாக படவில்லை, இதைப் போல ஒவ்வொரு வரும் செய்தால் நாளை தமிழ் பதிவுலகில் யாரும் புதிய தகவலைச் சொல்ல மாட்டார்கள். இந்த வார தினமலரிலிருந்து இன்னும் முழுமை யாக எல்லாரும் எல்லாப்பக்கத்தையும் சுடப்படாததல் கடந்த வார பதிப்பிலிருந்து இந்த ஆய்வு அறிக்கை.
 மீள் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் பின் வருமாறு. (இணையக் குழுக்கள் forum  நீங்கலாக)








இந்த திருட்டுகளில் கவனித்தால் அதிகமான தளங்கள் வர்த்தக ரீதியானவை என்பதும், வியாபார நோக்கோடு திருடப்பட்டவை என்பதும் விளங்கும். இத்தகைய தளங்களின் தவறை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு,   

இந்த வார திருட்டுப்பதிவு நட்சத்திரமாக பட்டம் சூட்டப்படும் வலைப்பூ http://denaldrobert.blogspot.com/
அதிகமாக நமது சக தொழிற்நுட்ப  பதிவர்களின்  பதிவுகளை அமைதியாக திருடி தனது பதிவில் இட்டு பகிர்ந்துக் கொண்டு வர்த்தக ரீதியாக லாபம் சேர்க்கும் அற்புதமான தளம்  

Sunday, May 2, 2010

எதுவெல்லாம் பதிவுத் திருட்டு



எங்கோ யாருக்கோ ஒருவரின் பொருள் திருடப்படுகையில் அதைப் பார்த்துவிட்டுப் பரிதாபப்பட்டுவிட்டு நமது வேலைகளை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண மனிதர்கள் நாம். அதே போல ஒருநாள் நமது பொருளும் திருடப்படும் என்பதை கொஞ்சம் யூகிக்க நமது சோம்பேறித்தனம் தடுக்கிறது. பதிவிலகில் பெரிய பெரிய தகவல் களஞ்சியங்கள் உருவாகும் காலம் வெகுத்தொலைவில் இல்லாத பொழுதில் பதிவு திருட்டுக்களால் அவை வீண்ணடிக்கப்படுவது உறுதி. இந்த இடுகையில் எதுவெல்லாம் பதிவுத் திருட்டாகக் கொள்ளலாம் என்று எனது பார்வையை விவரிக்கிறேன்.

பொதுவாக நம்பப்படுவது, ஒரு பதிவை அப்படியே நிரல் எடுத்து தனது தளத்தில் உரியவரின் ஒப்பமின்றி இடுவது. பரவலாக அதைத் தான் பதிவுத் திருட்டு என்கிறோம் ஆனால் கொஞ்சம் யோசித்தால் மேலும் பல வழிகளில் ஒருவரின் அறிவுச் செல்வத்தை அபகரிக்கமுடியும்

தான் விரும்பிய வேறொருவரின் பதிவை படித்ததில் பிடித்ததாக  தனது தளத்தில் இட்டு கடைசியில் உரியவரின் பெயரைமட்டும் போட்டு நன்றி சொல்வது. இங்கே கவனிக்க வேண்டியது இணையத்தில் நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக புதுமையான பெயர்களில் எழுத்தாளர்கள் உதயமாகிறார்கள். அத்தகையவர்களுக்கு பரந்துபட்ட தமிழ் பதிவுலகம் அறிமுகமில்லை அவர்களின் பெயரை மட்டும்(தள இணைப்பின்றி) போட்டுக் கொள்வதால் அந்த படைப்பாளி அடையாளப்படுத்தப்படாமல் போகிறான்.

அடுத்ததாக சில இடங்களில் பதிவுடன் அந்தப் பதிவரின் தளத்திற்கும் இணைப்புக் கொடுப்பார்கள். நாமும் அடையாளப்படுத்தப் படுகிறோம் என்று அந்த படைப்பாளியும் அமைதியடையலாம், அது அவரின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் அவ்வாறு ஒருதளத்திலிருப்பவைகளை காப்பி செய்து போடுவது கூகிள் போன்ற தேடுதளங்களுக்குத் தெரியாது. அவை குறி சொற்களுக்கு தேடும் போது நமது தளத்திற்கு பதிலாக காப்பி செய்து போடப் பட்ட தளத்தையே முன்னிறுத்தும். அப்போது பாமர வாசகனுக்கு எழுத்தாளன் யார் என்று தெரியாமலே வாசித்துவிட்டு செல்வான்.

இதற்கு அருமையான உதாரணங்கள் Forum எனப்படும் இணையக் குழுக்களே . இவை தனது வாசகர்களால் பல தளங்களில் இருந்து பிடித்த இடுகைகளை தனது தளத்திற்கு வாங்கிக்கொள்ளும் சில சமயம் படைப்பாளியின் பெயரின்றியும் பிரசுரிக்கப்படுவதுண்டு. இந்த குழுக்கள் எப்போதும் அதிக டிராபிக்கை கையில் வைத்துக்கொள்வதால் கூகுளின் ரேங்க் அதிகம் பெற்று தேடுதளங்களில் முன்னிலைப்படுத்தப்படும். புதிதாக தேட நினைத்து தேடுபவர்களுக்கு பதிலாக இந்த தளங்களே முதன்மை படுத்தப்பட்டு ஹிட்டுக்கள் எனப்படும் புது வாசகர்களைத் தட்டிச் சென்றுவிடும். இத்தகைய நிகழ்வே தெரியாமல் நமது படைப்பாளி யாரும் இல்லாத தெருவில் டீயாற்றிக் கொண்டுஇருப்பான்.

அடுத்ததாக நமது அறியாமையால் நமது பதிவுகளுக்கு படங்கள் போடுவதற்காக கூகிள் தேடி படங்களை எடுத்து நமது பதிவுகளை அலங்கரிப்போம் சிலர் கூகுளுக்கு நன்றியும் சொல்வார்கள். உண்மையில் அந்தப் படங்கள் போது பயன்பாட்டிற்கு இல்லாத போது இப்படி பயன்படுத்துவதும் ஒருவகையில் திருட்டு என்பேன். உண்மையில் இந்தப் படங்கள் கூகிள் வெளியிடுவதில்லையே வேறுயாரோ ஒருவரின் ஒளி வண்ணத்தில் உதயமானது. அவர்களின் தளத்துப் படங்களை அறியாமையால் திருடி போட்டுவிட்டு கூகுளுக்கு நன்றி சொல்வது எப்படி பொருந்தும்? உங்கள் படமும் தேடுதளங்களின் வரிசையில் முதன்மை படுத்தப்படலாம் அவரின் உழைப்பை லாவகமாக தட்டிவிட்டுச் செல்லும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.


மேலே கூறிய அனைத்தம் பதிவுத் திருட்டின் வகைகளே அனைத்தையும் தடுக்கமுடியாவிட்டாலும் ஒரு புரிதலுக்காகவாது இதை அறிந்திருக்க வேண்டும்.

இந்த வார பதிவுத் திருட்டு நட்சத்திரம் 
இவர் தளத்தில் பொதுவாக தின நாளிதழ்களிருந்து அதிகமான பதிவுகளும் மற்றும் நமது சக பதிவர்களின் பிரசித்திப் பெற்றப் பதிவுகளும் காணலாம். சோதிக்க விழைபவர்கள் அந்த தளத்தின் ஏதாவது ஒரு பதிவை எடுத்து கூகுளில் இட்டால் உண்மைகள் ஊருக்குத் தெரியும்

மீண்டும் சந்திப்போம்
நன்றி

Friday, February 19, 2010

அறிமுகம்

அண்மையில் ஒரு செய்தி, ஹாரி பாட்டர் எழுதிய ஜே.கே. ரௌலிங் மீது ஒரு வழக்கு என்னவென்றால் அவர்  "The Adventures of Willy the Wizard: No. 1 Livid Land"  என்ற புத்தகத்திலிருந்து காட்சிகளை திருடி தனது கதையுடன் இணைத்துள்ளார்யென்பதுதான் அது. இணையுலகில் ஒருவரதுக் கருத்தை மற்றவர் திருடிப் போடுவதென்பது காலம்காலமாக நாம் வரும் திருட்டுத் தொழிலின் நவீன வடிவம் எனக்கூறலாம். அனால் இணையத்திருடர்கள் பொழுதுபோக்காகவும், வியபரரீதியாகவும், அறியாமையாலும் உருவாகிறார்கள். எந்த வகையாகயிருந்தாலும் எழுத்துக்குச் சொந்தக்காரர்படும் வலிக்கு முக்கியக் காரணமாகிறார்கள். 

இணையம் வளர்ந்த அளவுக்கு அதற்கு பாதுகாப்புக்கள் வளரவில்லை, சைபர் கிரைம் நாளுக்கு நாள் வளர்கிறது ஏனெனில் தொழிற்நுட்பம் அவ்வளவு பரந்தது. புதுப்புது யுக்திகளில் அச்சுத்தங்களுடன் பல இணையதளம் இளைய சமுதாயத்தைக்  குறிவைத்து தொடங்கப்பட்டு வருகிறது. அதில் பதிவுத்திருட்டு என்பதும் ஒரு அச்சுத்தமே. பல நாள் பாடுபட்டு எழுதிய ஒரு படைப்பை சில மணித்துளிகளில் எளிதில் திருடிப் பலனை பெறுபவர்கள் தான் பதிவுத்திருடர்கள். அதைத் தட்டிக்கேட்கவோ முட்டிப்பார்க்கவோ பெரியளவில் விழிப்புணர்ச்சியில்லை. காரணம் எது திருடப்பட்ட பதிவு யார், உண்மையான படைப்பாளி என்ற கேள்விகளுக்கு பதிலில்லாமே திருட்டுப்பதிவை நாமும் ஆதரித்துவந்திருப்போம். 

பிடித்தமான பதிவுகளைப்  பகிர்ந்துக்  கொள்வதென்பது "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" சரிதான் ஆனால் அது உரிமையாளருக்கு தகுந்த மரியாதைக்  கொடுக்காவிட்டால் "கடைத்  தேங்காவை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததுப்  போல" ஆகும். தயவு செய்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும் உதாசீனப் படுத்தாதீர்கள்.

இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டது தெரிந்தாலே திருட்டுப் பதிவுகள் குறையும் என்ற யோசனையில்  உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன். கடந்த இடுகை அதிகமான மக்களை அடையாததால் அந்த இடுகைக்கு ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

அடுத்த இடுகையில் அதிகம் திருடப்படும் தளங்களின் தொகுப்பு வெளியிடப்படும். அதன் பிறகு தனிநபர் திருட்டுக்களின் அறிக்கை வெளிவரும் 
உங்கள் ஆதரவையும் வேண்டிக்கொள்கிறேன் 


Monday, February 15, 2010

அஸ்திவாரம்

பதிவுலகில் பதிவுதிருட்டுக்கள் நடப்பதை தடுக்கும் முயற்சியின் முதல் படியாக இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம், ஆதரவு தருபவர்கள் தொடர்ந்துதரலாம்.


நான் பதிவுலகம் வரும் பொழுது நான் பார்த்த பதிவு திருட்டுக்களால் மனமுடைந்து பதிவு எழுதுவதையே நிறுத்திவிட்டேன். வெகு நாள்கழித்து ஒரு யோசனை, இதைப்போன்று ஒரு தளத்தை நிறுவினால் ஒரு விழிப்புணர்வு வரும் என்று எண்ணுகிறேன். ஆனால் தனிமனிதனாக முயலுவதைவிட கூட்டு முயற்சியாக தொடங்கலாம் என கருதுகிறேன். அதனால் உங்கள் யோசனைகளை தந்து செம்மைபடுத்துங்கள்.


பொதுவாக செய்தித்தாள்களில் வரும் செய்தியை அப்படியே காப்பி செய்து தனது இடுகையைப்போல (செய்தியின் சுட்டியில்லாமல்) போட்டுக்கொள்வது.
செய்தித்தாளில் வரும் சிறப்புப்பகுதிகளில் இருந்து தொழிற்நுட்ப பகுதி, நகைச்சுவை பகுதி, படைப்புகள் போன்றவற்றை திருடிப்போடுவது.
முக்கியமாக சகப்பதிவர்களின் பதிவைத் திருடிப்போடுவது forum யென்கிறப்பெயரில் சகட்டுமேனிக்கு உரிமையாளரின் சுட்டிகளின்றி பதிவைத் திருடுவது
மேலும் பல..
சில சமயம் உங்கள் பதிவுகூட உங்களுக்குத்தெரியாமல் திருடப்பட்டிருக்கலாம் கூகுளில் உங்கள் பதிவின்(தலைப்பை பயன்படுத்தி தேடாதீர்கள்) உள்வரிகளைப் போட்டுப்பார்த்தால் தெரியும்.


நாம்மில் பலரின் பதிவுகள் திருடப்பட்டிருக்கலாம் அல்லது திருடப்படும் என்ற அச்சத்தில் எழுதாமலும் இருக்கலாம் நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்தால் பதிவு திருட்டைக் கட்டாயம் ஒழிக்கமுடியும்.


இப்போதைய திட்டம்:


1 ஆங்காங்கே பதிவு திருட்டுப்பற்றி பதிவிடுவதற்கு பதில் இந்த தளத்தில் பதிந்து அனைவரையும் சென்றடையச்செய்யலாம்.
2 நல்ல வழிமுறைகள் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
3 ஒரு நடுநிலையான ஒரு தளமாக நாமும் அதை எதிர்த்து பதிவிடலாம் கருத்துச்சொல்லி நல்வழிப்படுத்தலாம்.
4 இந்த தளத்தின் மூலம் நாம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்ல தமிழ் பதிவுகளை உருவாக்கலாம்.
5 தாங்கள் கண்ட அல்லது பாதிக்கப்பட்ட பதிவு திருட்டுக்களை தகுந்த சுட்டிகளுடன் எங்கே சமர்பியுங்கள் அடுத்துவருபவர்களுக்கு இது ஒரு செய்தியாகயிருக்கும். திருடியவருக்கும் பாடமாகயிருக்கும்.
6 வாரவாரம் அந்த வாரத்தில் வந்த பிரதுகளை தொகுத்து பதிவு செய்யலாம்யென கருதுகிறேன். உங்கள் பிராதை மறுமொழி பகுதியில் சமர்பிக்கலாம். (இப்போது வேண்டாம் )




இவை மேலோட்டமான திட்டமே, மேலும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வரவேற்கபடுகிறது. இதை குழுப்பதிவாகவும் செயல்படுத்த யோசனைகள் வரவேற்கபடுகிறது.  இப்போதைக்கு இந்த தளத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகளும் அறிவுரைகளும் மட்டும் வழங்கி அணி சேருங்கள்.


இப்படிக்கு,
திருட்டுப்பதிவுகளை ஒழிக்கமுனையும்  முனையும் ஒருவன் 


உங்கள் வலைதளத்தில் ஒரு இணைப்புத்தந்து அனைவரையும் சென்றடையச்செய்யுங்கள், அனைவரையும் சிந்திக்கச்செய்யுங்கள்